Angkorwat (அங்கோர்வாட்)

நான் இதற்கு முந்தைய பதிவில் தாய்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தை பற்றியும், பீமாயில் உள்ள கோவில் பற்றியும், அங்கு எனக்கு கிடைத்த அங்கோர்வாட் என்ற புத்தகத்தினை பற்றியும் ஒரு சில விவரங்களை உங்களிடம் பகிர்ந்திருந்தேன்.
இந்த அங்கோர்வாட் கோவிலிற்க்கு நான் நேரில் சென்று பார்க்க வில்லை என்றாலும், பீமாயில் எனக்கு கிடைத்த அந்த புத்தகத்தின் வாயிலாக அங்கோர் வாட் கோவில்பற்றி நான் அறிந்து கொண்ட மேலும் சில விடயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இந்த அங்கோர்வாட் கோவிலானது பீமாயில் உள்ள கோவிலை முன்மாதிரியாக வைத்து மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட கோவிலாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலானது இந்து கோவில்களாகவே இருந்துள்ளது. இந்த கோவில் கட்டுமானமானது இந்துக் கோவில்களின் கட்டுமான விதிமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளன. பின் நாட்களில் அங்கே புத்த மதம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் இக்கோவில்களில் இருந்த இந்து கடவுள்களை அப்புறப்படுத்தி விட்டு புத்த சிலைகளை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
பீமாய் மற்றும் அங்கோர்வாட் கோவில்களில் உள்ள சிற்பங்கள் கிட்டத்தட்ட தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருக்கின்ற சிற்பங்கள் போலவே இருந்தது.
நான் சைனாவில் பணியாற்றி கொண்டிருந்த பொழுது அங்கோர்வாட் கோவிலிற்கு செல்ல நிறைய வாய்ப்புக்கள் இருந்தும் அங்கு செல்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. ஆனால் மாறாக தற்பொழுது இந்தியாவில் இருக்கின்ற பொழுது நிறைய நேரம் இருந்தும் என்னால் அங்கு செல்ல முடியவில்லை.
அங்கு சென்று வருவதற்கான பணத்தை சேமித்த பிறகு ஓர் ஐந்து நாட்கள் அங்கேயே தங்கி இருந்து கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலை பற்றி முழுமையாக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றேன்.
இந்த அங்கோர்வாட் கோவில் பற்றிய புத்தகத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தோம் என்றால் அந்த காலகட்டத்தில் எவ்வாறு கப்பல்கள் மற்றும் யானைப் படைகள் மூலம் போரிட்டனர் என்பதை விளக்கும் அரிய புகைப்படங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அங்கோர்வாட் கோவிற்க்கு நேரில் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டால் தான் இதனைப் பற்றி முழுமையாக உங்களுக்கு எடுத்து கூற முடியும்.
தற்போது அந்த புத்தகத்தில் இருக்கின்ற புகைப்படங்களை மட்டுமே வைத்து எனக்குத் தெரிந்தவற்றை இதில் பதிவேற்றுகிறேன். அந்த புத்தகத்தில் உள்ள புகைபடங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிய வரும்.
தமிழ் மன்னர்கள் ஆண்ட இந்த இடத்தில் இன்றளவும் நந்தி சிலைகள், சிங்கயாளி சிலைகள் போன்ற சுவடுகள் இங்கே நிறைய உள்ளன.
இந்த அங்கோர்வாட் கோவிலானது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த கோவிலானது பல நூறு ஆண்டு காலமாக கண்டுபிடிக்கப்படாமல் செடி கொடிகள் முளைத்து முற்றிலும் அழியும் தருவாயில் இருந்துள்ளது. பின்னர் ஒரு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தான் இதனை முதன்முதலில் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள்.
இந்த மாபெரும் கோவில் நகரத்தை உருவாக்கிய மன்னர்கள் எதற்காக இதனை கைவிட்டு சென்றனர் என்பது இன்றுவரையிலும் புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.
இக்கோவிலானது அனைவரும் பார்த்து வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலில் எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன.
இங்குள்ள சிற்பங்களில் தமிழருடைய உடை ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களை பார்க்க முடிகிறது. இந்த அங்கோர் வாட் கோவிலை பொறுத்தவரையில் தமிழர்களுடைய தாக்கத்தை அதிகம் காண முடிகிறது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்னர்களுடைய ஆட்சி கடல் கடந்து நீண்டிருந்ததை இந்த அங்கோர்வாட் கோவில் மூலம் அறிய முடிகிறது.
ஒரு நாட்டை கைப்பற்றுவதற்கு கப்பல் படையினை கொண்டு செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் படையினை வைத்திருந்தான் நம் ராஜராஜ சோழன் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கின்றது.
அவரின் காலத்திற்குப் பின்னால் இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் கடல் கடந்து இங்கு வரை நீண்டிருப்பதை பார்க்கும்பொழுது அவர் எவ்வளவு பெரிய படையினை வைத்திருப்பார். அவரினுடைய வீரர்கள், போர் தளபதிகள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்திருப்பார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் கர்வமாகவும் உள்ளது.
இக்கோவிலின் புகைப்படங்களை வைத்து ஒரு சிலவற்றை எழுதி இருக்கிறேன். இனி 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அங்கோர்வாட் கோவிலிற்க்கு நேரில் சென்று இன்னும் நிறைய தகவல்களை உங்களுக்கு தர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இனி சிங்கப்பூர் அருங்காட்சியகம் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Leave a Comment

Your email address will not be published.

Angkorwat (அங்கோர்வாட்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page