Thanjavur (தஞ்சாவூர்)

நாம் முன்னதாக கொடும்பாளூர் கோவில்கள் பற்றியும், பழுவேட்டரையர்கள் பற்றியும், பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றை எழுதி முடித்த பிறகு நான் சபரிமலை அய்யப்பன் கோவில் சென்ற காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு நீண்ட இடைவேளை, பயணத்தில் ஒரு வித சோர்வு ஏற்பட்டது. அடுத்ததாக நம் பயணம் தஞ்சாவூர் நோக்கி செல்கிறது.
Tanjoreஇனிவரும் பதிவுகளில் தஞ்சாவூர்(Thanjavur ) பெரிய கோவில், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், கோவில்கள் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு என்னுடைய முக்கிய குறிக்கோளான சோழர்களின் வாழ்வும்! வீழ்ச்சியும்!! என்ற தலைப்பிற்கு விரைவாக செல்லவேண்டும் என்று நினைக்கின்றேன்.
ஏனென்றால் இந்த பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக வந்ததிலிருந்து தமிழ் மக்கள் அனைவருக்கும் சோழர்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதை கண்கூடாக கான முடிகிறது. அதை ஆர்வம் என்பதை விட ஆர்வ கோளாறு என்பது மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் படம் பார்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
உதாரணத்திற்கு ஒருவர் என்னவென்றால் அரையன் ராஜரஜா சோழனை அவரது மகன் ராஜேந்திர சோழனே கோவில் கோபுரத்தில் இருந்து தள்ளிவிட்டு கொன்றார் என்கிறார். இன்னொருவர் என்னவென்றால் ராஜராஜ சோழன் இந்துவே இல்லை என்கின்றனர். அதற்கும் ஒரு படி மேலே சென்று மற்றொருவர் குந்தவை இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என்கிறார்.
இவ்வாறு சோழர்களின் வரலாற்றை முழுமையாக அறியதா ஒரு சில அறிவு ஜீவிகள் அதை பற்றி பேசுவது கோபத்தையும் நகைப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த பொன்னியின் செல்வன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இன்று தான் பார்க்கபோகிறேன். இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தவரை எனக்கென்னவோ நாவலில் இருப்பது போல பூரணமாக எடுக்கவில்லை என்றே எனக்கு தோன்றியது.
ஏனென்றால் சோழர்களின் அடையாளமே புலிக்கொடி தான். அந்த புலி கொடிக்கு முக்கியத்துவம் அளித்து சோழர்களின் முழு ஆளுமை திறனை இப்படத்தில் காட்டாமல் அண்டை மாநிலங்களிலும் லாபம் பெற வேண்டும் என்கிற கீழ்த்தரமான லாப நோக்கத்தை மட்டுமே எண்ணி இந்த படத்தை எடுத்திருப்பதாக தோன்றுகிறது.
 
ஏனென்றால் சோழர்கள் கடைசி ஆட்சி காலம் வரை துரத்தி துரத்தி அடித்தது அன்றைய மேலை சாலுக்கியமான கர்நாடகாவையும். கீழை சாலுக்கியமான தற்போதைய ஆந்திராவையும் தான். இந்த இரண்டு மாநிலங்களையும் காட்டும் போது வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் என்னவோ தெரியவில்லை நிறைய வரலாற்று நிகழ்வுகளை மறைத்து முற்றிலும் லாப நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை இயக்கியது போல தெரிகிறது. இவர்களுக்கு பணம் தானே முக்கியம்.
இனி படத்தை பார்த்துவிட்டு மற்ற விஷயங்களை சொல்கிறேன். இப்போது தஞ்சை பெரிய கோவில் பற்றியும், நாங்கள் அங்கே கண்ட அருங்காட்சியகம் பற்றியும், அங்குள்ள கலை படைப்புகளை பற்றியும் விரைவாக பார்ப்போம். இந்த பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்து விடும். நேரில் சென்று பார்க்கும் சுகமே தனி தான் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.
நான் முந்தைய பதிவில் கூறியது போல அங்கே இருக்கும் அருங்காட்சியகத்தை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது. சுரங்கம் போன்ற அமைப்பில் அது அமைந்துள்ளது. அதன் வெளித்தோற்றத்தை பார்த்தோமானால் அந்த அருங்காட்சியகம் ஏதோ படுத்துறங்கும் மடம் போல காட்சி அளிக்கின்றது. அந்த பொக்கிஷத்தின் அவலநிலையை பார்க்கும் போது என் மனம் கலங்கியது.
அதனால் இது போன்ற மனக்கசப்பான விசயங்களை சற்று விரைவாக பார்த்துவிட்டு எனது முக்கிய குறிக்கோளான சோழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் பற்றி பார்க்க இருக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் அரையன் ராஜராஜ சோழன் பற்றி புதுப்புது கட்டுக்கதைகளை வலையோலியில் கட்டவிழ்த்து விடுவதை தினம்தினம் பார்க்க முடிகிறது.
ஒரு புறம் நாளிதழ்களிலும் வந்தியதேவன் கடந்து வந்த பாதை என்று எழுதி வருகின்றனர். வந்தியதேவன் ஒரு பெரும் பலசாலி, புத்திசாலி, பெரிய வீரன் என்பதை ஒப்பு கொள்ளலாம்.ஆனால் அவர்தான் பெரிய படைகளை திரட்டிய படை தளபதி என்று சிதரிப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.
வட நாட்டிற்கு படைகளை திரட்டி படையெடுத்து சென்று போரில் வென்றது அரையன் ராஜராஜ சோழனும், அருண்மொழி பட்டன் என்கிற பிராமணனும் தான். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியதேவனை முன்னிலை படுத்தியதால் அவரே முதன்மையானவர் என்று எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். வரலாற்று உண்மையை பார்க்கையில் வந்தியதேவன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே சோழர்களின் முதன்மையான படை தளபதி என்று எங்கும் குறிப்பிட வில்லை.
இதில் வியக்கதக்க விசயம் என்ன வென்றால் இந்த படத்தில் பாண்டியர்களை பற்றி கேவலமாக சித்தரித்து காட்டிருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு பெரும் சண்டையே நடக்கிறது. இது ஒன்றே போதும் தமிழர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து பிரிந்து கிடக்கிறார்கள் என்பது புரிந்துவிடும். ஒற்றுமை என்பது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழனிடத்தில் மிகவும் குறைவு என்பதற்கு இதுவே சான்று.
 
சரி மீண்டும் நம் பக்கத்திற்கு செல்வோம். இனி வரும் பதிவுகளில் நம் தஞ்சை பெரிய கோவில் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு எனது முக்கிய நோக்கமான சோழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் பற்றி பார்ப்போம். அதுவே என் முக்கிய குறிக்கோள், அதுவே நான் செல்ல வேண்டிய பாதை, அதுவே என் லட்சியம்.
நான் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தான் என் மானசீக குருவாக ஏற்று கொண்டவன் என்பதை உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். அவர் தான் உடையார் என்ற நாவலிலும்,கங்கை கொண்ட சோழன் என்ற நாவலிலும் அது ஒரு புனைவு கதையாக இருந்தாலும் கூட அதில் 95% விழுக்காடு அதை பற்றி முழுமையாக ஆராய்ந்து உண்மையை எழுதி இருக்கிறார். அவரை பின் தொடரும் என் நாவலிலும் முழுமையாக ஆராய்ந்து உண்மை மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனி வரும் பதிவுகளில் என் பயணத்தை விரைவாக பயணிக்க இருக்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page