நூல் ஆசிரியர் ப.நல்லையா அவர்களின் பெற்றோர் பரமசிவம் – செல்லத்தாய், மனைவி பெயர் அமுதா. இவருக்கு முதலாவதாக இரட்டை பெண் குழந்தையும், ஒரு மகனும், கடைசி கடைக்குட்டியாக ஒரு பெண் குழந்தை என நான்கு குழந்தைகளும், மற்றும் உடன் பிறந்த தங்கை ஒருவரும் உள்ளனர்.
தற்போது இவர் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அழகாபுரி என்ற சிறிய கிராமத்தில் அமைதியான கிராமத்து வாழ்கையை வாழ்ந்து வருகிறார்.
இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகதில் (National University of Singapore) BSc physics (இயற்பியல்) துறையில் பட்டப்படிப்பு பயின்றவர்.
பட்டபடிப்பை முடித்ததும் சிங்கப்பூர் SEAGATE TECHNOLOGY. (Hard Disk Manufacturing) என்ற கம்பெனியில் கிட்டத்தட்ட இருபத்தி எட்டு வருடம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். அதில் சாதாரண production supervisor ராக பணிக்கு சேர்ந்து, படிப்படியாக முன்னேறி கடைசியில் senior Dirictor வரை பணி உயர்வு பெற்றவர்.
இதற்கு முன் தமிழில் சிறுகதைகள் எழுதி சிங்கப்பூர் நாளிதழ்களில் பரிசு பெற்ற அனுபவமும் இவருக்கு உண்டு. அதே சமயம் சோழர்களைப் பற்றி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டும் வருகிறார்.
சோழர்களைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டும் அல்ல. சோழர்களை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதுவதையும், ஆறு மாதத்திற்குள் அவர்களை பற்றிய முழுமையான வரலாற்று புத்தகம் ஒன்றை வெளியிடுவதையும், அவர்களுக்கென நிரந்தரமான இணையதளம் ஒன்றை உருவாக்குவதையும், இவரின் முக்கிய குறிக்கோள்களாக கொண்டுள்ளார்.