தற்போது நாம் மூன்றாவது பக்கத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் ஆராய்ச்சி முடிவுகளை பற்றி பார்போம். தஞ்சை பெருவுடையார் கோவில் ராஜ கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள விமானமானது எம்பது டன் எடை கொண்டதாகும். அந்த விமானமானது ஒரே கல்லினால் செய்யப்பட்டதா? அல்லது பல்வேறு கற்களை ஒன்றிணைத்து கட்டப்பட்டதா? என்பது இன்றுவரை புரியாத ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. சிலர் அதை மிக பெரிய அளவிலான நான்கு கற்களை சேர்த்து அதை ஒன்றுடன்ஒன்று பிணைப்பு ஏற்படுத்தி செய்யப்பட்டது என்றும், சிலர் அதை பல சிறு சிறு கற்களை ஒன்றிணைத்து கட்டப்பட்டது என்றும் சிலாகித்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் அழகை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன். அந்த கலை பொக்கிஷத்தின் அருமையை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆங்காங்கே அழகான நந்தி சிலைகளும், கையில் கத்தி கேடையங்களுடன் கூடிய போர்வீர மறவர்களின் சிலைகளும் இருந்தன.
இது போன்ற சிலைகள் தான் நான் மிகவும் தேடிய ஓன்று. ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படியான உடை அணிந்திருந்தார்கள், எப்படிபட்ட ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பற்காண எந்த ஒரு ஆதாரமும் நம் நாட்டில் இல்லை.
ஆனால் சீன நாட்டினரை பொறுத்தவரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களின் முன்னோர்கள் பற்றிய தேடலை ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வரலாற்றை ஆராய்ந்து அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில் வரலாற்று சார்ந்த ஆவணங்களை அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால் நம் நாட்டை பொறுத்தவரையில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை என்பது தான் நிதர்சனமான ஓன்று. ஒரு கவிதை நடையில் கூட அவர்கள் எப்படிப்பட்ட உடை அணிந்திருந்தார்கள் என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் மாறாக கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் கர்ப்ப கிரகத்தில் உள்ள மனித உருவம் கொண்ட விக்கிரகங்களை வைத்து தான் யூகிக்க முடிகிறது.
ஏனென்றால் அந்த காலகட்டத்தில் கோவில்களில் நம் முன்னோர்களை கடவுளாக சித்தரித்து அவர்கள் எப்படியான உடை ஆபரணங்கள் அணிந்திருந்தார்களோ மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தினார்களோ அவற்றை அப்படியே சிலைகளாக வடித்து அவர்களை கடவுளர்களாக வழிபட்டு வந்துள்ளனர். அவற்றை வைத்து நாம் தற்போது கண்டுகொள்ள முடிகிறது.
இந்த தஞ்சை பெரிய கோவில் கட்டிடத்தில் பல இடங்களில் வில் அம்போடும் கேடையத்தோடும் பல போர் வீரர்களின் சிலைகளை காண முடிகிறது. ஆனால் உடல் கவசம் அணிந்தது போன்ற எந்த ஒரு சிலையையும் இங்கே நான் பார்க்கவில்லை. உதாரணமாக கிரேக்க வீரர்கள், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வருவது போல உடல் கவசங்கள் அணிந்திருகின்ற போர் வீரர்களின் சிலைகள் என் கண்களில் தென்படவில்லை. அது சம்பந்தமான தேடலில் நான் ஈடுபட்ட போது எந்த ஒரு ஆதாரமும் எனக்கு கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இக்கோவிலில் உள்ள வில்அம்பு, கேடையத்துடன் கூடிய சிலைகளை வைத்து பார்க்கும் பொழுது இவர்கள் சோழர்கள் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான படை தளபதிகளாக இருந்திருக்கலாம். அந்தப் படை தளபதிகளையே ஒரு மாதிரி வடிவமாக வைத்துக்கொண்டு இந்த சிற்பங்களை வாடிவமைத்திருக்கலாம். ஏன்னென்றால் அதில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு முக அமைப்போடு வெவ்வேறு விதமாக இருக்கிறது.
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் அந்த கால தமிழர்கள் பெரிய மீசை வாதிருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே மீசை வைத்திருக்க கூடிய சிலைகளை பார்ப்பதென்பது மிக மிக அறிதான ஒன்றாக உள்ளது. சிற்பங்களை செத்துக்கும் போது மீசைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. கடவுள் சிலைகளுக்கும் மனிதர்களின் சிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டிற்காக அப்படி சிலை வடித்தார்களா என்று புரியவில்லை. .
நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கோவில் சிற்பங்ககள், சுவர்கள், செப்பு பட்டையங்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்களை சேத படுத்தி அழித்ததோடு பல்வேறு வகையான விலைமதிப்பில்லாத பொருட்களை திருடி சென்றுள்ளனர். அதனால் தான் நமக்கு எந்தஒரு ஆதாரமும் கிடைக்க வில்லை. அவர்கள் நம்மை ஆண்ட காலத்தில் நம் வாழ்வை சீர்க்குழைத்ததோடு நமது வலாற்று சின்னங்களையும் சீர்க்குழைத்து செற்றுள்ளனர்.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த சிற்பிகள் கட்டிட கலையில் நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு மிகுந்த அறிவாற்றலோடும் கற்பனை திறனோடும் சிறந்து விளங்கியுள்ளனர். கோவில் கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லிற்கும் உள்ள இடைவெளியில் கடுக்காய் கருப்பட்டி கலந்த சுண்ணாம்பு கலவையால் மிக இருக்கமாக பிணைத்து கட்டியுள்ளனர். அன்றைய கால சிற்பிகள் ஒவ்வொருவரும் கைத்தேர்ந்த பொறியாளர்கலாகவே செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்தபடியாக மூன்றாவது பக்கத்தில் ஒரு தூணின் அமைப்பை பார்த்தீர்கள் என்றால் கோவில் முன் மண்டபத்தில் ஒரு தூணை நிறுத்தி அதன் மேல் நான்கு பக்கமும் மேர்கூரையை தாங்கி பிடிக்கின்ற வகையில் வடிவமைத்து சமநிலை படுத்தி கட்டியுள்ளனர். தஞ்சை பெரிய கோவிலானது சிறிய அடித்தளம் கொண்ட கோவிலாகும். ஆனால் இன்றுவரை பல நிலநடுக்கங்களையும் தாண்டி நிலைத்து நிற்கின்ற வகையில் கட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது பக்கத்தில் ஆறாவது வரிசையில் உள்ள துவாரபாலகர் சிலையானது பளிங்கு கல்லில் செய்தது போல தத்ரூபமாக உள்ளது. உடல், மார்பு,கை,கால், அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு உயிருள்ள சிலை போலவே தோற்றமளிக்கிறது. ஆங்காங்கே தூண்களிலும், கோவில் சுவர்களிலும் பல யாழி சிலைகளை காணமுடிகிறது. அந்த பிரமாண்ட கோபுரத்தை கீழ் இருந்து பார்த்தால் ஒரு பிரமீடு போன்ற அமைப்பை ஒத்துள்ளது.
இந்த தஞ்சை பெரிய கோவிலை பொறுத்தவரையில் ஒரு சிறு இடம் கூட விடாமல் அழகிய வேலைப்பாடுகளால் அந்த கோவில் முழுவதும் சிற்பங்கள் நிரம்பி வழிகின்றது.
இந்த கோவில் வரலாற்று சம்பந்தமான கோவில் ஆதலால் சுவாமி தரிசனம் செய்வதற்க்கும் அல்லது ஆராய்ச்சி மேற்கொள்வதற்க்கும் கட்டணம் செலுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
இக்கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தான் கோவில் வளாகம் அவ்வளவு தூய்மையாக இருக்கிறது. ஆனால் கோவில் பணியாட்களோ அங்கு வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுடன் பொறுப்பில்லாதவர்களாவே இருக்கின்றனர். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் நந்துகொள்வது போலவே இங்கேயும் இருக்கிறார்கள். ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் பணி செய்கிறோம் என்கின்ற பொறுப்பு அவர்களிடத்தில் இல்லை. சம்பளம் வாங்குவதற்காக மட்டுமே பணி செய்வதாகவே தெரிகிறது.
கோவிலினுள் நாங்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு மூலையில் தற்செயலாக கண்காட்சி ஒன்று எங்கள் கண்ணில் பட்டது. அது ஒரு தகவல் மையம் யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியாத இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தகவல் மையத்தில் பல தகவல்கள் இருந்தன. உதாரணத்திற்கு 1950 களில் இந்த கோவிலானது எப்படி பாலடைந்து கிடந்தது, பின்னர் 2005ஆம் ஆண்டு காலத்திற்குப் பின்னால் எப்படி இந்த கோவிலை சீரமைத்தார்கள் என்பது போன்ற தகவல்கள் அங்கே புகைப்படங்களுடன் இருந்தன.
இந்த தஞ்சை மண்ணின் மீது படையெடுத்து நாட்டை கைப்பற்றி தஞ்சையை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பாண்டியர்கள் கூட சோழர்களால் கட்டப்பட்ட கோவில்களையோ மற்றும் மடங்களையோ எதுவும் செய்யவில்லை. அவற்றிற்கு மதிப்பளித்திருகின்றனர் என்பது தான் எல்லோராலும் ஏற்று கொள்ள கூடிய உண்மை . அதே போல் சோழர்களும் பாண்டிய மண்ணை ஆண்ட போதும் கூட மீனாட்சி அம்மன் கோவிலை எந்த சேதமும் செய்யவில்லை.
ஆனால் நம் தமிழ் மண்ணை தாண்டி வந்த நாயக்கர்கள்,மராத்தியர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் செய்த அட்டகாசம் தான் மிகவும் வருந்தக்கூடியது. நம்முடைய வரலாற்று பொக்கிஷங்கள் பிற்கால சந்ததியினர் எவருக்கும் தெரிய கூடாது என்ற நோக்கத்தோடு அதை அழிக்க முற்பட்டிருக்கின்றனர்.அவர்களின் ஆட்சி காலத்தில் தான் பல தரங்கெட்ட செயல்களை செய்துள்ளனர்.
சோழர்கள் சிவ பக்தர்களாக இருந்திருகின்றனர். சோழர் ஆட்சி காலத்தில் வரையப்பட்ட சிவனின் அணைத்து முக பாவங்களையும் காட்டுகின்ற திரிபுராந்தகர் ஓவியத்தை மறைத்து தமிழர்களின் வரலாறு வெளியில் தெரிய கூடாது என்ற நோக்கத்தில் அதன் மேல் நாயக்கர் கால ஓவியங்களை வரைந்துள்ளனர். ஆனால் அதனையும் பிரித்தெடுத்து வெளிக்கொண்டுவரும் ஆற்றல் தமிழர்களுக்கு உண்டு என்பதை அன்று அவர்கள் தெரிந்திருக்கவில்லை. தற்போது அதை ஒரு தமிழ் அறிஞர் வெளிக்கொண்டு வந்துவிட்டார்.
அந்த கோவில் எங்கும் சிவனின் புகழ் ஓவியமாக சிலையாக கலையாக நிறைந்து உள்ளது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சிவனின் ஓவியமானது அதில் உள்ள வண்ணங்கள் அழியாமல் இன்றளவும் மிக அழகாக காட்சியளிக்கின்றது. ஆனாலும் தமிழர்கள் எதையும் எளிதில் மறந்துவிடகூடியவர்களாக இருப்பது மன வேதனையை அளிக்கின்றது.
இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் முதல் மரியாதை மராத்திய வம்சாவழியை சேர்ந்தவர்களுக்கு தான் அளிக்கப்படுகிறது. மராத்திய மன்னர்களுக்கும் ராஜராஜ சோழனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத பொழுது அவர்களுக்கு ஏன்? எதற்காக? முதல் மரியாதை கொடுக்கிறார்கள் . நம்மிடம் அன்றும் சரி இன்றும் சரி என்றுமே ஒற்றுமை இருந்தது கிடையாது. இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்களே தவிர தமிழர் என்கின்ற உணர்வு யாரிடத்திலும் இல்லை.
ஒருவர் என்னவென்றால் தமிழ் மூதாட்டி ஒளவையார் எனது பாட்டி என்றும் முருகன் எனது பாட்டன் என்றும் பிதட்றுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். கிறிஸ்துவராக இருந்துகொண்டு தமிழ் கோவில்களையும் தமிழ் அறிஞர்களையும் அவர் உரிமை கொண்டாடுகிறார். இது எந்த விதத்திலும் சரியில்லை. இது மாதிரியான ஆட்களை நம்பி தான் இன்று தமிழ் இளைஞர்கள் போய் கொண்டிருக்கின்றனர்.