அடுத்ததாக நான்காவது பக்கத்திற்கு செல்வோம். இந்த கோவிலின் ஒரு சிறிய பகுதியில் வரலாற்று தமிழ் அறிஞர்கள் பற்றி மிக தெளிவாக எழுதி இருக்கிறார்கள். இவர்கள் சோழர்களின் வரலாற்றை நிலைநிறுத்தி சோழ சாம்ராஜ்யத்தின் அரிய பல தகவல்களை சேகரித்து அதை புத்தகங்கள் வாயிலாக உலகிற்கு கொண்டு வந்தில் இவர்களின் பங்கு அலப்பறியது.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நீலகண்ட சாஸ்திரி என்ற தமிழ் அறிஞர் தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த தென்னாட்டு போர்க்களங்கள் என்ற புத்தகம் தான் சோழர்கள் பற்றிய தேடலையும், வரலாறு சார்ந்த ஆர்வத்தையும் எனக்குள் கொண்டு வந்தது என்பதை நான் முன்பே கூறியிருந்தேன். அந்த புத்தகத்தில் சோழர்கள் போரிட்ட வரலாறு அத்தனையும் வரிசைப்படுத்தி மிக தெளிவாக எழுதிருந்தார்.
நாம் தற்போது நவீன உலகத்தில் இருக்கிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் போன்ற வரலாற்று சின்னங்களை பார்க்கும்போது தமிழர்களின் அறிவியல் கலைத்திறனை பற்றி கர்வம் கொள்ள வைக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களின் தொழில்நுட்ப அறிவை நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இக்கோவில் வளாகத்தில் கோவிலின் தொன்மையும் அதன் வரலாறும் கோவில் விமானம் பற்றிய தகவல்களும் விரிவாக வைக்கபட்டுள்ளது. கோவிலுக்கு வரும் மக்கள் அனைவரும் அதனை பார்த்து எளிதில் தெரிந்து கொள்கின்ற வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கோவிலுக்கு வரக்கூடிய வெளிநாட்டவர் மற்றும் வெளிமாநில மக்களுக்கு தமிழர்களின் பாரம்பரியம் தமிழர்களின் திறமை பற்றி அதை பார்க்கும் பலருக்கு சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்றும் நம் முன்னோர்களின் புகழ் ஓங்கி ஒலிக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.
இக் கோவிலில் நிறைய சிவ லிங்கங்களை பார்க்க முடிகிறது. சோழர்கள் ஆட்சி காலத்தில் மன்னரோ அல்லது அரசியோ இறந்து விட்டால் அவரின் நினைவாக ஒரு பள்ளிப்படை கோவில் எழுப்பி அதில் ஒரு சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது என்பது சோழர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. நான் நினைப்பது என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒரு பெரிய படை வீரர்களாக இருந்திருக்கலாம். அவர்களின் நினைவாக இத்துணை சிவலிங்களை வைத்திருக்கலாம்.
எனது பக்கத்தில் தஞ்சை பெரிய கோவில் பற்றிய நிறைய புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதை பார்த்து மகிழலாம். அடுத்த பதிவில் சந்திப்போம்.