அடுத்ததாக ஆறாவது பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தீர்களேயானால் கோவில் சுவர்களில் வில் அம்பு கேடையத்துடன் கூடிய தேவர் சிலைகள் இடம்பெற்றிருகின்றன. அவற்றை பார்க்கும் பொழுது சிறந்த போர் வீரர்களை மாதிரியாக வைத்துக்கொண்டு அந்த சிற்பங்களை தேவர்களாக செதுக்கியுள்ளனர். கோவில் கோபுரத்தின் ஓரிடத்தில் கண் விழிகள் பிதுங்கிய நிலையில் வேற்று கிரகவாசியை போன்ற ஒரு கோரமான ஒரு சிலை உள்ளது. நான் இதுவரை எங்கும் இதுபோன்ற கோரமான சிலையை பார்த்ததில்லை.
கோவிலின் ஒரு பகுதியில் சிவனும் பார்வதியும் அருகருகே இருப்பது போன்ற சிலையானது உயிரோட்டமாக காட்சியளிக்கின்றது. பார்வதி தேவியின் சிகை மற்றும் நகை அலங்காரங்கள் மிக நேர்த்தியாக செதுக்கபட்டுள்ளது. தலையில் ஒரு மான் இருப்பது போன்று செய்யப்பட்டிருப்பது கவனிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த சிலைகளுக்கு அருகில் ஒரு மன்மதன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் கோபுரத்தின் உச்சியில் ஒரு சிறய இடத்தில் தலையில் குல்லா போட்டிருக்க கூடிய வெள்ளைக்கார சிலை உள்ளது. இந்த சிலையை பார்க்கும் பொழுது கோவிலிற்க்கும் இச்சிலைக்கும் எவ்வித பொறுத்தமும் இல்லை. இந்த சிலையை பார்த்துதான் பல சர்ச்சைகள் எழுகின்றன. சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் அந்த கால சிற்பிகளுக்கு நம்மை பிற்காலத்தில் யார் ஆளப்போக்கிறார்கள் என்பது பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கும் அதனால் தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல்.
நான் இந்த சிலையை தேடி பலமுறை கோவிலை சுற்றி பார்த்தேன் என் கண்ணில் படவில்லை. என்னுடன் வந்த என் சகோதரன் தான் அண்ணா நீங்கள் கூறிய சிலை அங்கு உள்ளது என்று எனக்கு அதை காண்பித்து கொடுத்தார். பின்னர் அதை புகைப்பட கருவி மூலம் பெரிதாக்கி பார்த்தேன். அந்த காலத்திலேயே செய்திருப்பார்களோ என்று நினைத்து கொண்டேன்.
ஆனாலும் எனக்கு ஒரு வகையில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதன் காரணம் என்ன என்றால்? அந்தக் காலத்தில் ஒரு கோபுரத்தில் உள்ள நான்கு முனைகளில் ஒரு பக்கத்தில் நந்தி சிலையோ, அல்லது காவல் பூத சிலையோ இருந்தால் அதே மாதிரியான சம அளவுள்ள சிலைகள் கோபுரத்தின் நான்கு முனைகளிலும் இடம்பெற்றியிருக்கும். நான் ஆராய்ச்சி மேற்கொண்ட வகையில் இது போன்ற கோட்பாடோடு தான் கோவில்களில் சிலைகள் அமைக்கபட்டிருக்கின்றன. ஆனால் இந்த சிலையானது முரண்பாடோடு காணப்பட்டது.
இந்த சிலை எதற்காக வைக்கப்பட்டது என்றால் நம் சோழ வரலாற்றில் குழப்பம் ஏற்படுத்தும் தீய நோக்கத்தோடு மாற்றி அமைத்துள்ளனர் என்று நினைக்கின்றேன். இது போன்ற தரங்கெட்ட செயல்களை செய்தது யாராக இதுக்கும் என்று பார்த்தோமானால் அது நம்மை அடிமை படுத்தி நம் வளங்களை திருடி சென்ற ஆங்கிலேயர்கள் மட்டுமே இருக்க முடியும்.
இக்கோவிலில் அடுத்தடுத்து நந்தி சிலைகள் நிறைய உள்ளன. இவையணைத்தும் பழங்காலத்தில் கோவிலின் முன்பக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நான் இந்த தஞ்சை பெரிய கோவிலை அருகிலிருந்தும்,தொலைவிலிருந்தும், சாய்வாகவும் என பல கோணங்களில் புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துள்ளேன். நான் அடுத்த முறை செல்லும் போது அந்த கோபுரத்தை 360° கோணத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்காக நான் ஒரு மிகவும் விலை உயர்ந்த ஒரு புகைப்பட கருவியை வாங்கி நீங்கள் கண்டுக்களிக்கும் வகையில் மிக தெளிவான புகைப்படங்களை எனது பக்கத்தில் பதிவிடுவேன். இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து பயணிப்போம்.