நாம் தற்பொழுது ஏழாவது பக்கத்தை பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த பக்கத்தின் முதல் வரிசையில் ஒரு கம்பீரமான ஆண் சிங்க உருவ சிலையானது அமைக்கபட்டுள்ளது. அதன் உடலமைப்பும் அதன் தலையும் சற்றும் பொருந்தாத வகையில் உள்ளது. ஏனென்றால் அதன் தலையானது சிங்கம் போன்றும் உடலைப்பு மனிதர்களை போலவும் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கற்பனை சிலையா என்பது தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
அந்த சிலைக்கு மேலே முன்னங்காலை மடக்கி பின்னங்கால் மண்டியிட்டு கையில் சங்குடன் தாமரை மாலை அணிந்து கொண்டு அமர்ந்த நிலையில் ஒரு அழகிய பூத சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பூத சிலைகள் நீண்ட கோர பாற்க்களுடன் அகோரமாக அமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த சிலை நகை ஆபரணங்கள் அணிந்து மிகவும் அழகாக ஒரு புன்னகையுடன் பார்ப்பவர்கள் மனம் நெகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் சூரியன், பிரம்மா, நவகண்டம், போன்ற பல தேவரின் சிலைகளும் அதனுடன் நந்தி சிலைகளும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலிற்கு அருகில் மராட்டியர் கால அரண்மனை ஒன்று உள்ளது. ஆனால் இதன் வரலாற்றை அறிந்திடாத ஒரு சிலர் இந்த அரண்மனை சோழர்களால் கட்டப்பட்ட சோழர் கால தஞ்சை அரண்மனை என்றும் கூறுகின்றனர். இந்த அரண்மனைக்கும் சோழர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது பற்றிய புரிதல் நம் தமிழ் மக்களிடம் இல்லை என்பது மிகவும் வருந்ததக்க ஒன்று. ஒருவேளை சோழர்களால் கட்டப்பட்ட அரண்மனையை இடித்துவிட்டு அதே இடத்தில் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மராட்டிய மன்னர்களால் இந்த அரண்மனை கட்டபட்டிருக்கலாம்.
நம் தேசம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகின் பல சாம்இராட்ஜியங்களை தன் படைகளால் மிரளவைத்து வென்று கைப்பற்றிய நம் சோழ பேரரசர்கள் காலப்போக்கில் நாயக்கர்களுக்கும், மராட்டியர்களுக்கும் கீழ் அடிபணிந்து வாழ்ந்தார்கள் என்பதை நினைத்து பார்க்கும் பொழுது கண்ணில் இரத்தம் கசிகிறது.
சோழர்களால் நம் தமிழ் மக்களுக்காக கட்டபட்ட இக்கோவிலில் இன்றைக்கும் முதல் மரியாதை என்பது மராட்டிய வம்சத்தில் இருந்து வந்தவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. இது தமிழ் மன்னர்களால் தமிழர்களுக்காக கட்டப்பட்ட கோவில். இதில் தமிழர்களுக்கே முழு உரிமையும் உண்டு. ஆனால் மாறாக மாராட்டியர்களுக்கு கொடுக்கிறார்களே! நமக்கு ஏன் கொடுக்கவில்லை? ஏனென்றால் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பதே முக்கிய காரணம்.
மராட்டியர்கள் பொதுவாக, தான் பிறந்த மதத்தையும் ஜாதியையும் மாநில பற்றையும் எங்குமே விட்டு கொடுக்க மாட்டார்கள். ஆனால் தமிழர்களாகிய நமக்கு ஏன் இந்த ஒற்றுமை உணர்வு வரவில்லை என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.
நாயக்கர்கள் எப்படி தமிழ்நாட்டை அடிமைப்படுத்தினார்கள் என்று பார்த்தோமானால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கீழ சாளுகியதை வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர். அப்பொழுது கீழ சாளுகியர்கள் சோழர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். அதனால் தான் ஒவ்வொரு முறையும் கீழ சாளுக்கியர்கள் மீது மேலே சாளுக்கியர்கள் தாக்கிய போது சோழர் படைகள் தான் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு விரட்டியடித்தது. இத்தகைய மன உறவில் இருந்ததனால் தான் சோழ வீரர்கள் தன் உயிரையும் மாய்த்து கொண்டு கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகளாக கீழ சாளுக்கியர்களுக்கு சோழர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கியுள்ளனர்.
சோழர்கள் என்னதான் கீழ சாளுக்கியம் முழுவதையும் தன் அதிகார வட்டதிற்க்குள் கொண்டு வந்திருந்தாலும் தமிழர்களை அங்கு குடியேற்றி அவர்களை அடிமைப்படுத்தவில்லை, மாறாக எப்பொழுதும் போலும் சுதந்திரமாக அவர்களை வாழ அனுமதித்தனர்.
ஆனால் பிற்காலத்தில் நம் மண்ணை ஆண்ட நாயக்கர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றவுடன். அவர்களின் மாநிலத்தில் இருக்கிற குயவர்கள், தச்சர்கள், மற்றும் நாயக்கர்கள் போன்ற இன்னும் அவர்கள் மொழி பேசுகினற மக்களை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் குடியேற்றி பரவ வைத்தனர். அதனால் பூர்வக்குடி தமிழர்களை விட வேற்று மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமானது.
அதன் விளைவுதான் இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக அவர்கள் உருவாகியுள்ளனர். அதனால்தான் எங்கு பார்த்தாலும் நாயக்கன்பட்டி, நாயக்கனூர் என்று பல ஊர் பெயர்கள் காணப்படுகிறது. ஆனால் தூய தமிழ் பெயர்கள் உள்ள கிராமங்கள் சில தான் உள்ளன. இது காலத்தின் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னோரு காலத்தில் சீறும் சிறப்போடும் எல்லாம்வல்ல வளத்தோடும் வாழ்ந்த நம் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போரிட்டு கொண்டு அந்நிய படையெடுப்பை ஊக்குவித்த காரணத்தால் இன்று நம் மண்ணை ஆளும் தகுதி நமக்கு இல்லாமல் போனது.
இந்த தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள மராட்டிய அரண்மனையில் பல அறிய சோழர் கால கற்சிலைகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவிலிற்க்குள் இருந்த அருங்காட்சியகத்தை விட இங்கே மிக தெளிவாகவே வைத்திருந்தனர். இன்னும் மிக சிறப்பாக வைத்திருக்கலாம். ஆனால் இது போற்றுதலுக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.
இங்கே சோழ கால பல அறிய கற்சிலைகள் நிறைய உள்ளன. ஒரு உருண்டை வடிவிலான கல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கற்குண்டை பார்க்கும் பொழுது அதை ஒரு எறிகுண்டாக பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதை தான் எறி தாக்குதல் என்று கூறுவார்கள். அதன் அருகில் ஒரு நடு கல்லும் வைத்துள்ளனர். புலியை கொன்ற ஒரு வீரனின் நினைவாக வைத்துள்ளனர். அந்த காலத்தில் நடுகல் முறையானது ஒரு வீரன் செய்த செயலுக்காக அவர் இறந்த பின்பு அவரின் வரலாற்று நினைவை போற்றும் வகையில் வைப்பார்கள். உதாரணமாக, ஒரு கிராமத்தில் மக்களை காட்டு விலங்குகள், எதிரிகள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றுவது போன்ற செயல்களில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து கொண்டு உயிர் நீத்த வீரனிற்கு நடுகல் வைத்து வழிபட்டு வந்தனர். இதுவே பின்னாளில் குலதெய்வ வழிபாடாக மாறிருக்கலாம். இந்த அருங்காட்சியக்கத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சுடு மண்ணாலான முதுமக்கள் தாளியும் காட்சி படுத்தியிருந்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது நடைமுறையில் உள்ளது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறைப்படி ஓட்டு போடும் முறையை சோழர்கள் கொண்டு வந்துள்ளனர். ஒரு பனை ஓலையில் அடையாளமிட்டு அதனை பானையில் போட்டு அதில் யாருக்கு வெற்றி என்று நிர்ணயித்து பல முக்கிய அரசஅவை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தையும் சோழர்கள் கொண்டுள்ளனர்.
இந்த சிறிய அரண்மனை அருங்காட்சியத்தில் பல அரிய தகவல்கள் உள்ளன. அதாவது பிள்ளையார் சுழி போன்ற கி. பி 2300 ஆண்டு கால பாறை ஓவியங்கள் உள்ளன. இது ஒரு மாதிரிகள் தான் உண்மை இல்லை. இந்த ஓவியமானது சாத்தூர் அருகே உள்ள கழுகுமலை வெட்டுவான் கோவிலில் தான் உள்ளது என்று சொல்கிறார்கள்.
இங்கே குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் சீனாவில் இருப்பது போன்று பார்க்கோடு ஒளியியல் அமைப்பு இங்கே வைத்துள்ளனர். இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் அதனைப் பற்றிய முழு விபரமும் ஒரு நொடியில் கிடைத்து விடுகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க விடயம். இது ஒரு பெரிய முயற்சி போற்றதக்க கூடியது.
இங்கே ஒரு கம்பீரமான ஆறடி உயரமுள்ள ஒரு சிங்கயாழி சிலையானது வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை ஒரு மனிதனின் உயரத்திற்கு மிக அழகாக கல்லிலையே செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதனை பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மிக அழகாக தத்ரூபமாக உள்ளது. அதன் அருகில் தன் கன்று குட்டியின் இறப்பிற்கு நீதி கேட்டு வந்த மாட்டிற்காக தன் மகனையே தேரை ஏற்றி கொன்ற மனுநீதி சோழனின் அந்த வரலாற்று நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக பசு மணியோசை எழுப்புவது போன்றும், அதற்க்கு மனுநீதி சோழன் தீர்ப்பு வழங்குவது போன்றும் மிக அற்புதமாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.
இந்த அரண்மனை வளாகத்தினுள் சரசுவதி மகால் நூலகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதனை பற்றி முழுவதுமாக அறிய எனக்கு நேரம் கிடைக்காத காரணத்தினால் உள்ளே செல்ல முடியவில்லை. அடுத்த தஞ்சாவூர் பயணத்தின் போது ஓருவாரமாவது அங்கேயே தங்கி இதனை பற்றி விரிவாக ஆராய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
இந்த அரண்மனை வாளகத்தில் அங்கே என்னனென்ன பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதிற்காக ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. பார்க்க வேண்டிய இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் கலைக்கூடம், மணி கோபுரம், சரசுவதி மகால் நூலகம், சார்ஜா மாடி, தர்பார் மண்டபம், ஆயுத கோபுரம், சங்கீத மகால், ராம் மகால் இவை அனைத்தும் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் என்று அந்த தகவல் பலகையில் குறிப்பிட பட்டிருந்தன. ஆனால் இதிலுள்ள அனைத்தும் தமிழர்களின் பெருமை போற்றும் இடங்கள் அல்ல. மராட்டியர்களின் பெருமை போற்ற கூடிய இடங்கள் ஆகும். பிறகு இதை எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் மராட்டிய மன்னர்கள் நம்மை அடிமைபடுத்தியதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தது போல தெரிகிறது.
இதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் பற்றிய வரலாற்றை மகாராஷ்டிராவில் உள்ள கோவிகளில் வைக்க விடுவார்களா? நிச்சயமாக விட மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்குள் இனம் , மற்றும் மொழி மீதான பற்று அதிகம். ஆனால் தமிழர்களான நமக்கு தான் இந்த இன மொழி பற்று குறைந்து கொண்டே வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது.