இந்த தஞ்சை பெரிய கோவிலின் வெளிப்புறத்தில் தங்க முலாம் பூசப்பட்ட இராஜராஜ சோழனுடைய சிலை ஒன்று அனாதையாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. அதை யாரும் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள முடியாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தஞ்சை பெரிய கோவில் எனும் அதிசயத்தை கட்டியவனுக்கு கோவில் வளாகத்தின் ஒரு மூலையில் கூட அனுமதி தரப்பட வில்லை. இந்த சிலையை கோவில் வளாகத்தில் வைக்க தொல்லியல் துறை அனுமதி மறுத்திருக்கிறது.
பெரும்பாலும் தொல்லியல் துறையில் வடநாட்டவர்களே அதிகம் என்பதால் இராஜ ராஜ சோழ பேரரசனின் புகழ் யாருக்கும் தெரிந்து விட கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் இவ்வாறு வெளியே வைத்திருக்கிறார்கள். அப்படி தெரிந்தால் தமிழர்களே தொன்மையானவர்கள் உலகிற்கு தெரிந்துவிடும் என்ற நோக்கத்தில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் கீழடியில் கிடைத்த பொக்கிஷங்களை எடுத்து சென்று வாட மாநிலத்தில் கொண்டு போய் கேட்பாடற்று கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இது ஒரு கலாச்சாரத்தை அழிக்கும் செயல் இதை தமிழர்களாகிய நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது மாபெரும் குற்றம்.
தமிழர்களிடையே ஒற்றுமை இருந்திருந்தால் கட்டாயம் இந்த சிலையானது உள்ளே வைக்கப்படிருக்கும். ஜல்லிக்கட்டிற்காக போரடி உரிமையை பெற்ற நமக்கு இந்த சிலையை உள்ளே எடுத்து செல்வது என்பது பெரிய காரியமாக இருக்காது. அது பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தஞ்சை பெரிய கோவில் சிதிலமடைந்த பல சிலைகள் மராட்டிய அரண்மனை அதாவது தஞ்சை அரண்மனையில் வந்து காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை இருக்க வேண்டிய இடம் இவையல்ல. தஞ்சை கோவிலின் உட்புறத்திலேயே பல இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த தொன்மையான கலைப் பொருட்களை அங்கு வைப்பது தான் நியாயமானது. ஏனென்றால் அதை படைத்தவர்கள் மராட்டியர்கள் அல்ல தமிழர்கள்.
இந்த மராட்டிய அரண்மனை சுவர்களில் அக்காலத்திலேயே வண்ண ஓவியங்கள் மிக அழகாக வரைந்துள்ளனர். ஒரு புறம் மராட்டிய காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், நாணயங்கள், அனைத்தையும் காட்சி பொருளாக வைத்துள்ளனர். அவற்றில் சத்திரபதி சிவாஜி காலத்து நாணயங்களும், பல ஆண்டுகளுக்கு முன் இருந்த நாணயங்கள், பிரிட்டிஷ் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு நாணயங்களும் அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே கூறியபடி இவை அனைத்தும் மராட்டிய காலத்தின் பாரம்பரியத்தை தான் கூறுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரியத்தை அல்ல
நாம் எப்பொழுது ஒற்றுமையாக இருக்கிறமோ அன்றைக்கு தான் இதனை மாற்றி அமைக்க முடியும். இதுவரை ஏழாவது மற்றும் எட்டாவது பக்கத்தை பற்றி பார்த்தோம். இனி அடுத்த பக்கத்தில் மீண்டும் சந்திப்போம்.